
பழுலுல்லாஹ் பர்ஹான்
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான எம். எஸ். எம். சுபைர் அவர்களின் 2012ஆம் வருட கிழக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் மூலம் காத்தான்குடியில் பல்வேறு சமூக, சமய சேவைகளை செய்துவரும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைக்கு போட்டோப் பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்ட்ட போட்டோப் பிரதி இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வு 16-03-2013 சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ். எம். அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஜம்மியதுல் உலமா சபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட போட்டோப் பிரதி இயந்திரம் பிரதம அதிதியாக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான எம். எஸ். எம். சுபைரினால் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ். எம். அலியார் பலாஹியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இங்கு கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான எம். எஸ். எம். சுபைர், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ். எம். அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயுட்காலத் தலைவர் முஸ்தபா (பஹ்ஜி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேஹ் றிஸ்வான் மதனி ஆகியோரினால் சிறப்பான உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயுட்காலத் தலைவர் முஸ்தபா (பஹ்ஜி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேஹ் றிஸ்வான் மதனி, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேஹ் ஜிப்ரி மதனி, காத்தான்குடி மஃஹதுஸ்ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் ஸைனுலாப்தீன் மதனி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எல். எம். பரீட், கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் சுபைரின் இணைப்பாளர் மற்றும் உலமாக்கள், ஊடகவியலாளர்கள், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Leave a comment