
-MJ
புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒரேயொரு நுரையீரலில் தான் உயிர் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. 76 வயதையுடைய போப் பிரான்ஸிஸ் போப் 16ம் பெனடிக்ட் திடீரென பதவி விலகியதையடுத்து, அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இனிமேல் போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார்.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மன் ஆகிய 3 மொழிகளில் பரீட்சயமான போப் பிரான்ஸிஸ், 2005ல் பாப்பரசராகத் தெரிவாகவேண்டியவர். 16ம் பெனடிக் அவருக்கு இருந்த பலமான போட்டியால் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என போப் பிரான்ஸிஸ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment