மட்டு- போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு அமைக்க மட்டக்களப்பு மெக்ஸல் ஹாட்வெயார் உரிமையாளர் மீராசாகிபு நிதி உதவி

– பழுலுலாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

அவுஸ்திரேலியாவின் பிரபல எலும்பு முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான வைத்தியர் டேவிட் யங்கின் முயற்சியில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முழு வசதிகளையும் கொண்ட அதி நவன தொழிநுட்பகங்களிளான அவசர விபத்துப் பிரிவு அமைப்பக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படள்ள அவசர விபத்துப் பிரிவுக்காக உலகலாவிய ரீதியில் வர்த்தக சமூகத்திடமிருந்து நிதி சேகரிக்கபட்டு வருகின்றன. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சமூகத்திடமிருந்தும் நிதி உதவிகள் ஏதிர்பாக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போது அங்கு கலந்து கொண்ட மட்டக்களப்பு ‘மெக்ஸல் ஹாட்வெயார் ‘ கடையின் உரிமையாளர் அஹமட் லெவ்வை மீராசாகிபு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள அவசர விபத்துப் பிரிவுக்காக (25,000/-) இருபத்து ஐயாயிரம் ரூபா காசோலையை பியப் அமைப்பின் தலைவருமான வைத்தியர் டேவிட் யங்கிடம் கையளித்தார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு பிலால் எம்போரியம் உரிமையாளர் கலீல் ஹாஜியார் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்கள் அவசர விபத்துப் பிரிவுக்காக நிதி உதவிகள் வழங்குவதாக உறுதியளித்தனர்.

BY: FM. Farhan
BY: FM. Farhan

Published by

Leave a comment