
– ரைஸ்
புதுநகர் 62 ஆம் வீட்டுத்திட்ட இருவேறு வீதிகளில் பழுதடைந்து காணப்படும் இரு கல்வெட் சிலேப் (Slab) மூடிகளை திருத்தி சீரமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நகரசபைக்குட்பட்ட சில பகுதி மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து நகரபிதா எம்.எம். ஹில்மி கிண்ணியா நகரசபைக்குட்பட்ட இடங்களில் காணப்படும் குறைபாடுகளை நேரடியாக சென்று பார்வையிட்டதோடு மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டார். அத்தோடு அபிவிருத்தி செய்யப்படவேண்டிய இடங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டர்.
கிண்ணியா நகரசபை நகரபிதாவின் முன்னெடுப்புக்களில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தோனா மட்டக்களப்பு வீதியிலிருந்து ஆலங்கேணி வரையிலான வீதியினையும் அவர் பார்வையிட்டு குறித்த பிரதேச மக்களிடம் அதன் குறை நிறைகளையும் கேட்டறிந்தார்.
இதன்போது நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர்களான சசிதரன், உமேஸ்கண்ணா மற்றும் அப்பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
Leave a comment