சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை விற்பனை செய்து வந்த இடமொன்று பொலிஸாரால் முற்றுகை

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்து வந்த இடமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள வீடொன்றிலும், மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலுமுள்ள வீடொன்றிலும் சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்வதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று சோதனை செய்த பின்னர் அங்கிருந்த சில கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 இங்கிருந்து ரிஸிவர் மற்றும் அதற்கு பயன்படுத்திய தொலைக்காட்சி பெட்டிகள் உட்பட அதனோடு தொடர்புபட்ட கருவிகளை கைப்பற்றியதாகவும் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இக்கருவிகள், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் கைது செய்யப்பட்டட்டவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவற்றை அவர்களிடம் கையளித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் அடங்கிய ஆவணங்களை மேற்படி உரிமையாளர்கள், மட்டக்களப்பு பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment