ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தாக்குதல்: 5 இராணுவத்தினர், 2 முஜாஹிதீன்கள் பலி

-MJ

ce1d20ea-d33d-494d-951a-0f2955034afaHiRes[1]
BY: MJ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள மத்திய ரிசர்வ் படை பொலீஸ் முகாம் ஒன்றை இன்று காலை  முஜாஹிதீன்கள் தாக்கினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பெமினா பகுதியில் உள்ள பள்ளி அருகே ராணுவத்தினருக்கும், முஜாஹிதீன்ககளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

இதில் 2  முஜாஹிதீன்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மேலும் 4 முஜாஹிதீன்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து பெமினா பகுதிக்கு கூடுதல் படை வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. முகாமை தாக்கிய பிறகு 2  முஜாஹிதீன்கள் தப்பித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Indian Police D.I.G. Abdul Ghani
Indian Police D.I.G. Abdul Ghani

Published by

Leave a comment