– பழுளுல்லாஹ் பர்ஹான்

தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் வழகாட்டலில் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வீதி விபத்துக்களை நிரந்தரமாக தடுப்போம்’ எனும் தொனிப் பொருளில் வீதி பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொறுப்பாளர் ஜயவர்த்தன, காத்தான்குடி பொலிஸ் மோட்டார் போக்குவரத்து அத்தியட்சகர் ரணசிங்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிரேஷ்ட அதிகாரி ஆர். டப்ளியூ. எம். ரூபசிங்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஓய்வு பெற்ற அதிகாரி சேமலரட்ண, காத்தான்குடி முச்சக்கர வண்டி, வான், பஸ் சாரதிகள், காப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாரதிகள் என்போர் யார்?, அவர்கள் எவ்வாறிருக்க வேண்டும், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், வீதி விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது, அப்படியும் ஏற்பட்டால் அதை எவ்வாறு முகம் கொள்வது என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.



Leave a comment