மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை

BY: FM. Farhan
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவு அமைப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவின் பிரபல எலும்பு முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான வைத்தியர் டேவிட் யங்கின் முயற்சியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மற்றும் விபத்துப் பிரிவுகள் அமைப்பக்கப்படவுள்ளன.

சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள அவசர விபத்துச்சேவை சிகிச்சைப்பிரிவு தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.முருகானந்தன் தலைமையில் நேற்று செவவாய்க்கிழமை பகல் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது வைத்தியசாலையில் விபத்துகள், அவசர பிரிவு தனியாக அமைக்கப்படுவதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அது சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ்,    பியப் திட்;டத்தின் அமைப்பாளர் எலும்பு முறிவு வைத்திய நிபுனர் வைத்தியர் டேவிட் ஜங் (அவுஸ்திரேலியா), வைத்திய நிபுணர்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின்போது, பியப் திட்டத்தின் அமைப்பாளர் எலும்பு முறிவு வைத்திய நிபுனர் வைத்தியர் டேவிட் ஜங் இனால் தோல் அறுவை சிகிச்சை உபகரணம் ஒன்றும் மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment