புதிய பாப்பரசராக ‘போப் பிரான்ஸிஸ்-I’ தெரிவு

-MJ

BY: MJ
BY: MJ

இன்று, புதன்கிழமை மாலை, வத்திக்கான் கார்டினல் சபையின் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்த நிலையில் லத்தின் அமெரிக்கா நாட்டவரான ‘ஜோர்ஜ் பேர்கோக்லியோ’ எனும் ‘ஆர்ச் பிசப்’ பிரிவைச் சேர்ந்த ஆசிர்வதிப்பர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ‘பிரான்ஸிஸ் I’ என இவரை உலகம் அழைக்கும்.

76 வயதுடைய புதிய ‘போப் பிரான்ஸிஸ் I’ அவர்களுக்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துள்ளனர்.

இலத்தின் அமெரிக்காவின் வரலாற்றில் முதலாவது பாப்பரசராக ‘பிரான்ஸிஸ் I’ தெரிவு செய்யப்பட்டிருப்பதும், கடந்த மாதம் இறுதியில் இராஜினாமாச் செய்த போப் பெனடிக் 16, என்பவரது இடத்தை பிரான்ஸிஸ் I நிரப்புவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment