
பழுளுல்லாஹ் பர்ஹான்
1439 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கல்லடி புதியபால நிர்மாணப்பணிகளை மீள்குடியேற்றபிரதியமைச்சர் விநாயகமூர்த்திமுரளிதரன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்றுபார்வையிட்டார்.
மட்டக்களப்பு கல்லடி பால வேலைகள் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு இரவு பகல் பாராது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்புதியபாலம் இம்மாதம் 22ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் பொறியியலாளர் தர்மரெத்தினம், பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் பொன்.ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
Leave a comment