புணானை தலைமையகத்தில் சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல்

பழுளுல்லாஹ் பர்ஹான்

23வது படையணி கட்டளைத்தளபதியின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பூனானை தலைமையகத்தில் சர்வமத தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச பிரிகேடியர் சுதத் திலகரத்ன உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்களும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு பிராந்திய பொருப்பாளர் ஜுனைட் நளீமியும் களந்து கொண்டனர்.

இதன்போது மாவட்டத்தில் இடம்பெரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக அதிகரித்துவரும் மது பான சாலைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி பாடசாலைகளின் தொய்வு நிலை, முஸ்லிம்களுக்கெதிராக மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்படது. அனைத்து மதங்களும் தத்தமது மத சுதந்திரங்களுடன் வாழ வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கலந்து கொண்ட அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

Published by

Leave a comment