தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பில் ‘குரல் தேர்வு’ போட்டியாளர் தேர்வு வேலைத்திட்டம்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

இம்முறை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ‘தெயட கிருள’ தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து கலந்துகொள்ளும் போட்டியாளர் விபரம் ‘குரல் தேர்வு’ வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.

இதில் முதல் கட்டமாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் ‘குரல் தேர்வு’ வேலைத்திட்டம் மற்றும் ‘தெயடகிருள’ தேசத்துக்கு மகுடம் இசைநட்சத்திரம் உள்ளிட்ட மாபெரும் நிகழ்வை தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகள் ‘குரல் தேர்வு’ வேலைத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவ மாணவிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றஅதிகாரிகள், இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.

 

Published by

Leave a comment