ஜனாதிபதியின் விஷேட பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையிலான குழு வடக்கிற்கு விஜயம்

பழுளுல்லாஹ் பர்ஹான்

BY:FM. Farhan
BY:FM. Farhan

ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையிலான குழு நேற்றும் நேற்று முன்தினமும் கடந்த காலயுத்தத்தின் போது வடக்கில் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள மன்னார், வவுனியா, தமிழ், முஸ்லிம் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

 யுத்தம் நிறைவுற்று சமாதானமும் அமைதியும் நிரம்பி வழிகின்ற இச்சூழலில் மீள்குடியேற்றத்துக்கு தடையாகவுள்ள காணி தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதுதொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்துவது தொடர்பில் இங்கு ஆராயபப்பட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சிணை, நீர்த்தட்டுப்பாடு, வைத்திசாலை என்பன தொடர்பில் கேட்டறியப்பட்டது.

இவ்விஜயத்தில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும்அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் உட்பட பலர் இவ்விஜயத்தில் வருகை தந்திருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment