ஒரு சிறு குழுவினால் இருபது இலட்சம் முஸ்லிம்களின் மதஉரிமையும் சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது- ஸ்ரீ. ல.மு.கா. மட்டு மாநகர சபை உறுப்பினர் என்.கே. றம்ழான் கவலை

BY: FM. Farhan
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்

ஒருசிறுகுழுவினால் இருபது இலட்சம் முஸ்லிம்களின் மத உரிமையும் சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் விடயத்தில் அகில இலங்கை ஜம்யத்துல் உலமாசபையின் அறிக்கை அனைத்து முஸ்லிம்களையும் கவலையடையச் செய்துள்ளதாக ஸ்ரீ. ல.மு.கா மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.

குறித்தவிடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,    

அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபை இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் உள்ளுர் உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் அவசியம் இல்லை என்றும் ஏற்றுமதி உற்பத்திகளுக்கு மாத்திரம் ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்குவது என தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள விடயம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களையும் கவலையடையச் செய்துள்ளது.

குறித்த இத்தீர்மானம் எவ்வகையிலும் பொறுத்தமானதாக இருக்கமுடியாது. உள்ளுர் உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் தேவையில்லை என்றால் ஏற்றுமதி உற்பத்திகளுக்கும் ஹலால் சான்றிதழ் தேவையில்லை. எனவே ஹலால் சான்றிதழை முழுமையாக இரத்து செய்து இருக்கவேண்டும். உணவு உற்பத்தி நிறுவனங்களின் ஏற்றுமதியையும், வருமானத்தையும் ஈட்டிக் கொள்வதற்கு   முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரித்தான ஹலால் இலச்சினையை ஒருபோதும் லேபல்களாக பயன்படுத்த வேண்டியஅவசியம் இல்லை. இதனால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் என்ன நண்மையிருக்கின்றது. எமதுசமூகத்தின் உரிமையை அடகுவைத்து வர்தக நிறுவனங்களின் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கவேண்டிய எந்த தேவையும் முஸ்லிகளுக்கும் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபைக்கும் கிடையாது.

இவ்வாரனதொரு தீர்மானத்தினை இன்று எடுத்து எமது சமூகத்தின் இயலாமையை வெளிப்படுத்துவதாக இருந்தால் ஏன் இத்தனை நாளும் நீண்ட போராட்டம் நடாத்தியிருக்கவேண்டும். பல்வேறு சந்திப்புக்களை நடாத்தியிருக்கவேண்டும்? எமது கன்னியத்திற்குறிய உலமாக்கள் ஆட்சியாளர்களின் தயவை நாடிநிற்க வேண்டும்?

அன்றே எமது இயலாமையை ஏற்றுக் கொண்டு ஹலால் சான்றிதழை இரத்துச் செய்து இருக்கலாம்! அவ்வாறு செய்து இருந்தால் இதன் பின்னணியில் முஸ்லிம்களுக்குஎதிராக மேற்கொள்ளப்பட்ட ஏனைய அடக்குமுறைகளையும் அநீதிகளையும் தடுத்து நிறுத்தியிருக்கமுடியும். அதனை விடுத்து இவ்வாரானதொரு தீர்மானத்தினை காலம் கடந்து எடுத்து முழு முஸ்லிம் சமூகத்தினதும் இயலாமையை வெளிப்படுத்திய விடயம் கவளைக்குறியது.

இத்தீர்மானம் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபையினதும் இலங்கை முஸ்லிம்களினதும் விரும்பத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாக ஒருபோதும் இருக்கமுடியாது. பௌத்த கடும் போக்காளர்களின் கட்டாயத்தின் பெயரில் தினிக்கப்பட்ட ஒருதீர்மானம் என்பதை ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் அறிவார்கள்

இந்தநாட்டின் பௌத்த காக்கியுடையனிந்த ஒரு சிறுகுழுவான பொதுபலசேனாவினால் இருபதுலட்சம் முஸ்லிம்களின் மதஉரிமையும், சுதந்திரமும் திட்டமிட்டு பரிக்ப்பட்டுள்ளது. இதுஒருஆரம்பமே அன்றி முடிவல்ல எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment