உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக யூ.எல்.எம் முபீன் நியமனம்

BY: FM. Farhan
BY: FM. Farhan

– பழுளுல்லாஹ் பர்ஹான்

உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் யூ.எல்.எம். முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான இந்த பதவியை உற்பத்திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினராக,  காத்தான்குடி நகரசபைமுன்னாள் தவிசாளராக ஏலவே கடமையாற்றிய இவர்,  தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக கடமைபுரிகின்றார்.

இவர் ஒருசிறந்த சமூகசேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment