ஹலால் தொடர்பான விசேட அறிவிப்பினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று உத்தியோகபூர்வமாக விடுக்கவுள்ளது.
கொழும்பிலுள்ள சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இன்று காலை 9.30 மணிக்கு விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளது. இதன் போதே ஹலால் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் பெளத்த தேரர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இன்று நடைபெறவுள்ள செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஹலால் விவகாரம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களும், தேவையற்ற விமர்சனங்களும் கூறப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு விடயங்களை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அஹ்மத் முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் காரண மாக பிற சமூகத்தினருடனான முஸ்லிம் சமூக சகவாழ்வு ஓரளவு பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சமூக நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றோடு நாட்டு நலனையும் கருத்திற்கொண்டு நல்ல முடிவை ஜம்இய்யத்துல் உலமா எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
– தினகரன்
Leave a comment