வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், காணி விடங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் பேச்சு

அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி

– இர்ஷாத் றஹ்மத்துல்லா

IMG_0359
BY: Irshad Rahmathulla

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் றிசாத் பதியுதனீனின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புள்ளா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் இதன் போது வருகைத்தந்திருந்தனர்.

IMG_0359
Your Kattankudy

மேலும்அமைச்சர் பவுசி கருத்துரைக்கையில் –

யுத்தம் முடிவடைந்து தற்பாது மக்கள் தமது கிராமங்களுக்கு திரும்புகின்றனர். 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்த மற்றும் விவசாயம் செய்த ஆயிரக்கணக்கான நிலங்கள் இன்று இரானுவம் கையகப்படுத்தியிருப்பதாக மக்கள் முறையிட்டுள்ளனர். இந்த காணிகள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இரானுவத்தின் பணியானது மக்களை பாதுகாப்பதாகவும், மாறாக மக்களது காணிகளை பிரித்து கொடுக்கும் பணிகளோ, காணி கச்சேரிகளை நடத்துவதோ அல்ல. இதற்குரிய அமைச்சும் அதனது திணைக்களங்களும் அதனை செய்ய வேண்டும்.

IMG_0373
Your Kattankudy

‘இந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து மக்களது கஷ்டங்களை காணமுடிந்த்து. எனது ஆழ்ந்த கவலையினை இந்த மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பிரதேசத்தில் வாழும் எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களது இடங்களை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். சிவில் சமூகத்துடைய காணிகள் இரானுவத்தினரால் பாவிக்கப்படும் என்றால், அதனை அந்த மக்களின் தேவைகளுக்காக கொடுப்பது தான் சிறந்த்தாகும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்றாக இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தி இம்மக்களது விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவோம்’ என்றும் அமைச்சர் பவுசி கூறினார்.

IMG_0364
Your Kattankudy

Published by

Leave a comment