சர்வதேச குளுக்கோமா தினம் நாளை 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய குளுக்கோமா வாரமாக சுகாதார அமைச்சு பிரகடனம் செய்துள்ளது.
குளுக்கோமா எனும் கண்நோய் காரணமாக படிப்படியாக பார்வை இழக்கக் கூடிய நிலை ஏற்படும். முக்கியமாக குளுக்கோமா ஏற்பட்டதும் அந்நோய்க்கான எவ்வித அறிகுறியையும் இது உடனடியாகக் காட்டுவதில்லை.
கண்ணில் ஏற்படும் அழுத்தம் அதிகரித்தல் அல்லது குறைதல், நீரிழிவு நோய் ஏற்படல் மற்றும் குடும்பத்தில் யாருக்காவது இந்நோய் ஏற்பட்டிருத்தல் கண்ணை பாரதூரமாக ஏதாவது தாக்கியிருத்தல் அல்லது கண்ணில் ஏதேனும் புள்ளிகள் தோன்றியிருத்தல் காரணமாக குளுக்கோமா ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகமும் விசன் 2020 வேலைத்திட்டத்தின் தலைவருமான டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.
40 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் வருடத்துக்கு ஒருமுறை கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்போது குளுக்கோமா பரிசோதனையையும் செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பாலித்த மஹிபால தெரிவித்தார்.
![Glaucoma[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/glaucoma1.jpg?w=150&h=142)
Leave a comment