தாருல் அதரின் மனித நேயம் பேணும் 9 ஆவது இரத்ததான நிகழ்வு!

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM.Farhan
BY: FM.Farhan

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினால் மனித நேயம் பேணும் 9 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று ஞாயிறு காலை 9 மணியிலிருந்து, காத்தான்குடி-02, கப்பல் ஆலிம் வீதி, ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மனித நேயத்தின் உச்ச கட்டமான இந்நிகழ்வில் காத்தான்குடி, காங்கேயனோடை, பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மொத்தமாக 205 பொதுமக்கள் இரத்ததானம் செய்தனர். இவர்களுள் 180 ஆண்கள், 25 பெண்கள் என்பதும் விசேட அம்சம்

மேற்படி குறித்த அமைப்பு சமூகத்தில் ஆண்மீக ரீதியான செயற்பாடுகளை மாத்திரம் முன்னெடுத்து வருவது மட்டுமல்லாமல், சமூகப் பிரச்சிணைகளை இனங்கண்டு அதற்கான சிறந்த தீர்வுகளை வழங்கல், அவை தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment