காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடும் சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான விஸேட கருத்தரங்கும்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

மட்டு-காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடும் சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான விஸேட கருத்தரங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல். ஆதம்லெவ்வை பலாஹி தலைமையில் இடம்பெற்றது.

இம் மகாநாட்டில் சம கால குத்பாக்கள் அமைய வேண்டிய ஒழுங்கும் இமாம்களின் முன்மாதிரியும் எனும் தலைப்பில் விரிவுரையினை  தென் கிழக்குப் பலகலைக்கழக உப பீடாதிபதி அஸ்ஸெய்க் மௌலவி  ஏ.பி.எம். அலியார் றியாதி நிகழ்த்தியதோடு இமாம்கள் எதிர்நோக்கும் சவால்களும் தீர்வுகளும் எனும் தலைப்பில் விரிவுரையினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர்  அஸ்ஸெய்க் மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் மதனி நிகழ்த்தினார்.

இதன் போது சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு பற்றிய விளக்கத்தை  காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர், ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஸ்தபா மௌலவி வழங்கிவைத்தார்.

இங்கு கருத்துக்களம், கருத்தாடல், பாடல், கவிதை, தொகுப்புரை, அங்கத்தவர்கள் வருகை,பொதுக் கூட்டம், 2012பொதுக் கூட்டறிக்கை, செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை, புதிய நிருவாக உறுப்பினர் தெரிவும் தீர்மானங்கள் நிறைவேற்றல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர், உப தலைவர், பிரதித் தலைவர், செயலாளர், பொருளாளர், அங்கத்தவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Published by

Leave a comment