தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு என்பவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் கையளிப்பு

Kattankudy Media Forum
Kattankudy Media Forum

காத்தான்குடி மீடியா போரம்

காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு என்பவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.3.2013 அன்று மர்ஹுமா றிஸானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நூல் மற்றும் இறுவெட்டு என்பவற்றின் அறிமுக வைபவங்கள் கொழும்பு மற்றும் மூதூர் ஆகிய இடங்களில் நடாத்துவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் கிடைக்கும் பணமும் மர்ஹுமா றிஸானாவின் பெற்றோரிடமே கையளிக்கப்படவுள்ளது.

இந்த நூல் மற்றும் இறுவெட்டு தேவையானவர்கள் எதிர்வரும் 30.3.2013ம் திகதிக்கிடையில் 0773833636, அல்லது 0773235246 ஆகிய தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் தபால் மூலம் இந்த நூலை பெற விரும்புபவர்கள் மேற்படி தொலை பேசி இலக்கங்கங்களுடன் அல்லது காத்தான்குடி மீடியா போரத்தின் பொருளாளர் எஸ்.ஏ.கே.பலீலுர்றஹ்மானின் இ மெயில் alrafaqd@gmail.com எனும் முகவரியுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா  ஜே.பி.(ஊடகவியலாளர்)

செயலாளர்,

மீடியா போரம்,

காத்தான்குடி

Published by

Leave a comment