தாருல் அதரின் மனித நேயம் பேணும் 9 ஆவது இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை

By FM. Farhan
By FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார அமைப்பினால் மனித நேயம் பேணும் 9 ஆவது இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் நாளை 10.09.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு புதிய காத்தான்குடி-02 கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள தாருல் அதர் தலைமைக் காரியாலயத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் பீ.எம். றஊப் தெரிவித்தார்.

எனவே, இஸ்லாம் அனுமதித்துள்ள மனித நேயத்தை கட்டிக் காக்கக்கூடிய இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க ஆர்வம்கொண்ட அனைத்து சகோதர, சகோதரிகளையும் தாருல் அதர் அத்தஅவிய்யா அறை கூவல் விடுக்கின்றது

பெண்களுக்கும் பிரத்தியேகமான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ومن أحياها فكأنما أحيا الناس جميعا

‘ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்’ (அல்மாயிதா-32)

 

Published by

Leave a comment