
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டு-காத்தான்குடியில் பல்வேறு சமூக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுவரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 2013 வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும் விஷேட தர்பிய்யா நிகழ்வும் 08-03-2013 வெள்ளிக்கிழமை மாலை இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போ அருகாமையிலுள்ள காத்தான்குடி செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் விஸேட உரையினை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் சி.எம்.எம்.மன்சூர் நிகழ்த்தியதோடு நிகழ்வின் சிறப்புரையை காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஏ.ஜெ.ஜிப்ரி மதனி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின 2013 வருடாந்த தலைவர்,உப தலைவர் ,செயலாளர் ,உப செயலாளர்,பொதுச் செயலாளர்,இணைச் செயலாளர் ,பொருளாலர் ,உறுப்பினர்கள் தெரிவு என்பன இடம்பெற்றது.
இஸ்லாமிய அடிப்படையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனும் தலைப்பில் விஸேட தர்பிய்யா நிகழ்வை காத்தான்குடி மஃஹதுஸ்ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லூரியின் தலைவர் அஸ்ஸேஹ்க் மௌலவி றிஸ்வான் (மதனி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி ஏ.ஜெ.ஜிப்ரி மதனி, தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் சி.எம்.எம்.மன்சூர், காத்தான்குடி மஃஹதுஸ்ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லூரியின் தலைவர் அஸ்ஸேஹ்க் மௌலவி றிஸ்வான் (மதனி),அமைப்பின் பொருளாலர் தாஹிர் ஜேபி,உப தலைவர் நஸார்,உப செயலாளர் மௌலவி பௌசுல் அமீர் ஜமாலி ,அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ரவூப், இணைச் செயலாளர் மௌலவி எம்.ஏ.எம்.மஸூத் ( ஹாஸிமி) ,மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் உப செயலாளர்எம்.ஐ.எம்.சலீம் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி பிராந்திய இளைஞர் அமைப்பாளர் இல்மி அஹமட் லெப்பையின் வேண்டுகொளின் பேரில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் வழங்கிவைக்கப்பட்ட மட்டக்களப்பு வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதம் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி எம்.ஏ.எம்.மஸூத் அஹமட் (ஹாஸிமிக்கு ஸ்ரீ .ல.மு.கா –காகுடி பி. இ. அமைப்பாளர் இல்மி அஹமட் லெப்பையினால் வழங்கிவைக்கப்பட்டதோடு இரண்டு பேருக்கு சமாதான நீதவான் விண்ணப்ப்படிவமும் வழங்கிவைக்கப்பட்டது.
Leave a comment