
பழுளுல்லாஹ் பர்ஹான்
திருகோணமலை இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ‘The Game’ எனும் குறும்படத்தின் இசை வெளியீடு இசை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 16.03.2013 சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலைக்கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் விசேட அம்சமாக திருகோணமலையில் வளர்ந்து வரும் சொல்லிசை கலைஞர்களின் இசை நிகழ்வும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக பிரபல பின்னனிப் பாடகர் கிறிசான் மகேசன் மற்றும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை சொல்லிசைக் கலைஞன் ராம் அகராதி கனடாவிலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் திருகோணமலையின் புதிய தலைமுறை இசைக் குழுக்களான Heart Breakers Entertainment, Trinco Swaggers, The Future World இவர்களது சொந்த படைப்புகளை வழங்கவுள்ளனர். இவர்களுடன் ஸ்வரம்ஸ் குழுவினரின் இசை கச்சேரியும் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்பதுடன் அனைத்து கலை ஆர்வலர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

Leave a comment