
பழுளுல்வாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு காத்தான்குடி ஹிறா காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய வறிய மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய அதிபர் திருமதி அஜீரா கலீல்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகவும் விஷேட அதிதிகளாக மடட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் யூ. அஹமட் லெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லிபாறூக் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே. எல். எம். பரீட் காத்தான்குடி கோட்ட கல்விப் பணிப்பாளர் எஸ். எம். எம். சுபைர், அல்மனார் இல்லாமிய அறிவியற் கல்லூரி பொதுச்செயலாளரும் ஹிறா பவுண்டேஷனின் சர்வதேச பணிப்பாளருமாகிய மௌலவி மும்தாஸ் மதனி மற்றும் ஆசிரியர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Leave a comment