
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு புதிய காத்தான்குடி தெற்கு மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் 2012 வருடாந்த பரிசளிப்பு விழாவும் அஹதிய்யா பாடசாலை ஆரம்ப நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை வளாகத்தில் மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை பலாஹி தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன் போது மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவில் இருந்து காத்தான்குடி குர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்ற 32 மாணவ மாணவிகளுக்கு பிரதம அதிதி மட்டக்களப்பு – காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவர் மௌலவி எஸ். எம். எம். அலியார் (பலாஹி), கௌரவ அதிதிகளான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் அஸ்ஸெய்க் ஏ. எல். ஜூனைதீன் நளீமி, மட்டு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் எம். ஐ. கபூர் (மதனி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் எம். எச். எம். ஜிப்ரி (மதனி), காத்தான்குடி சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை, மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் செயலாளர் எம். எஸ். எம். அப்துல்லாஹ் , மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் உப செயலாளர் எம். ஐ. எம். சலீம் மற்றும் கௌரவ சிறப்பு அதிதிகளினால் விருதும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இப்பரிசளிப்பு விழாவின் சிறப்புரையை மட்டு மத்தி கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் எம். ஐ. கபூர் (மதனி) நிகழ்த்தியதோடு கௌரவ அதிதி உரையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் அஸ்ஸெய்க் ஏ. எல்.ஜூனைதீன் நளீமியும் பிரதம அதிதி உரையை மட்டக்களப்பு – காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவர் மௌலவி எஸ். எம். எம். அலியார் பலாஹியும் நன்றி உரையை மத்ரஸதுல் பாத்திமதுஸ் ஸஹ்றா மத்ரசாவின் செயலாளர் சமுர்த்தி உத்தியோகத்தர் எம். எஸ். எம். அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.
இங்கு இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியைகளுக்கு அன்பளிப்புகள் பிரதம அதிதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி சமுர்த்தி வலய முகாமையாளர் எம். ஏ. எம். சுல்மி காத்தான்குடி குர் ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையின் செயலாளர் எஸ். எல். ஏ. கபூர், காத்தான்குடி குர் ஆன் மத்தரசாக்கள் அபிவிருத்தி சபையின் பரிசோதகர் மௌலவி ஸாஜஹான் (பலாஹி), புதிய காத்தான்குடி பெரிய ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் கே. எல். அப்துல் றஹீம், குர் ஆன் மத்ரசாக்கள் முஅல்லிம்கள் சங்க செயலாளர் மௌலவி மன்சூர் (பலாஹி) புதிய காத்தான்குடி அஸ் ஸஹ்றா பாலர் பாடசாலை செயலாளர் குதுபுதீன் மற்றும் உலமாக்கள் கிராம உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Leave a comment