திருச்சி ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!: பலத்த பாதுகாப்பு

srilankan airlines[1]திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கன் விமான அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பஸ் நிலையம், கருமண்டபம் ஆகிய 2 இடங்களில் ஸ்ரீலங்கன் விமான முன்பதிவு அலுவலகங்கள் உள்ளன. அங்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், உடனடியாக அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து உள்ளார்.

இது குறித்து அலுவலக அதிகாரிகள் கண்டோன்மெண்ட் பொலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதையடுத்து, 2 அலுவலகத்திற்கும் பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் மிகின் எயார் ஜெனரல் சேல்ஸ் ஏஜென்ட் ஆக செயல்பட்ட ட்ராவல்ஸ் நிறுவனம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இன்று திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கன் விமான அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(OIT)

Published by

Leave a comment