சர்வதேச பெண்கள் தினம் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுறுத்துவதற்கான ஒரு அழைப்பாகும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பழுளுல்லாஹ் பர்ஹான்

பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழித்தல் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கு ஓர் உயர் முன்னுரிமை உடையதாகும், அந்த முன்னுரிமை மார்ச் 8ஆம் திகதியன்று வரும் சர்வதேச பெண்கள் தினத்தின் கருப்பொருளான  ‘ஓர் வாக்குறுதியென்பது என்றைக்குமே ஓர் வாக்குறுதிதான் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுறுத்தும் நடவடிக்கைக்கான நேரம்’ என்பதுடன் பொருந்துகிறது    என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். இது தொடர்பில் குறிப்பிடுகையில் அவர் கூறியதாவது,

‘பெண்களுக்கு எதிரான வன்முறையென்பது ஓர் உலகளாவிய குற்றமாக, வீட்டு வன்முறை, வன்புணர்ச்சி, பாலியல் தொல்லை, வேலைத் தலங்களிலான துஷ்பிரயோகம் மற்றும் போர்களில் ஓர் ஆயுதமாக பாலியல் வன்முறை  என்பது உட்பட  என பல ரூபங்களிலும் அது வருகின்றது. கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதிலுமிருந்தான பல சம்பவங்களிலிருந்து  இது எந்தளவு பரவியுள்ளதென்பதற்கு பல நினைவுபடுத்தல்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றினதும் திடுக்கிட வைக்கும் கதைகளுடன், உண்மையான பால்நிலை சமத்துவத்திற்கு அத்தகைய வன்முறைகள் புதிதாக எத்தகையதொரு தடையை இடுகின்றது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம்.

இது இந்த வருடத்தின் சர்வதேச பெண்கள் தினத்திற்கான கருப்பொருளை மேலும் ஏற்புடையதாக்குகின்றது. நடவடிக்கைக்கான ஓர் அழைப்பு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் குற்றமிழைப்பவர்களை தண்டிப்பதற்கு இருக்கின்ற சட்டங்களை வலியுறுத்துதல் மற்றும் இல்லாதவிடத்து புதிய சட்டங்களை உருவாக்குதலுக்கான  உந்துதல் என்பவற்றோடு இந்த விடயத்தை விட்டு விலகி நிற்றல் மற்றும் அதிர்ச்சியை  மட்டும் வெளிக்காட்டுதல் ஆகிய எங்களது மனப்பாங்குகளை நாம் மாற்றியமைத்துக் கொள்வதற்குமான ஒரு நினைவூட்டலே இதுவாகும்.

பிரச்சினையாகும், எந்த நாடும், எந்த சமூகமும் அதிலிருந்து விதிவிலக்காக இல்லை. இந்தப் பிரச்சினையை வீட்டிலேயே எதிர் கொள்வதற்கான தேவையை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் அங்கீகரிக்கின்றதுடன் அதனை முடிவுறுத்துவதற்கு நேர்மறையான நடவடிக்கைகளை அது எடுக்கின்றது. அத்துடன் சர்வதேச ரீதியாக வெளிநாட்டுச் செயலாளர்  வில்லியம் ஹேக் மோதல்களில் பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கு உதவுவதற்கு 2012 இல் ஓர் முன்னெடுப்பை ஆரம்பித்து வைத்தார்.  இங்கே இலங்கை மற்றும் மாலைதீவில் பெண்களுக்கெதிரான வன்முறையின் தொடரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு செயலாற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு தரப்பினதும் சக்தி, தைரியம் மற்றும் உறுதிசெய்தலுக்கு ஆதரவளிப்பதில் நாம் தொடர்ந்தும் எங்களது பங்கினை வகிப்போம்.

இது தொடர்பில் செயற்படல் என்பது தைரியம் கொண்ட ஒரு சிலருக்கு மட்டுமென விட்டு விடுதல் கூடாது அது எங்கள் அனைவராலும் தழுவிக் கொள்ளப்படுதல் வேண்டும். 2013 ஆண்டின் சர்வதேச பெண்கள் தினம் என்பது  பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுறுத்துவதற்கு எங்களுக்கானதொரு அழைப்பாகும்’.

Published by

Leave a comment