காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் என்.எம். அபூபஸல் தலைமையில் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பாளர் யூ.எல்.எம்.முபீன் கலந்து கொண்டதோடு சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பொலிஸ் நிலைய அத்தியட்சகர் ரணசிங்க, காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் நிஹார், காத்தான்குடியிலுள்ள 427 ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் பிரமுகர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வருடாந்த கணக்கறிக்கை, சங்கம்  சம்பந்தப்பட்ட அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment