‘ஈனோ’ மற்றும் ‘அயோடெக்ஸ்’ அதிநவீன ஆயுர்வேத உற்பத்தியாக்கல் வசதிக்காக GSK நிறுவனம் ரூ.230 மில்லியனை முதலீடு செய்கின்றது – இலங்கையில் ஆயுர்வேத துறையை பலப்படுத்துவதில் GSK அர்ப்பணிப்பு

By FM. Farhan
By FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

கிளக்ஸோ ஸ்மித்கிளைன் கன்சியுமர் ஹெல்த்கெயர் – ‘லங்கா (GSK) நிறுவனமானது மற்றுமொரு மைற்கல்லை எட்டும் விதத்தில், ‘ஈனோ’ – ENO (அமிலத்தன்மையை நீக்கும் ஆயுர்வேத பவுடர்) மற்றும் ‘அயோடெக்ஸ்’ – Iodex (ஆயுர்வேத பாம்) ஆகிய இரு உற்பத்திகளுக்கான புதியதொரு உற்பத்தித் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது. ரூபா 230 மில்லியன் பெறுமதியான இந்த முதலீடு, இலங்கைப் பொருளாதாரத்தில் இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீள உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘பனடோல்’ வில்லைகளுக்கான உற்பத்தியாக்கல் வசதியை 217 மில்லியன் இலங்கை ரூபா முதலீட்டுடன் CSK நிறுவனம் தொழிற்படுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து  நிறுவனம் மேற்கொள்ளும் அடுத்த முன்னெடுப்பாக இது அமைகின்றது.

இந்த தொழிற்சாலையானது, இலங்கையில் தற்போது காணப்படுகின்ற மிகப்பெரியதும் அதி முன்னேற்றகரமானதுமான ஆயள்வேத உற்பத்தியாக்கல் வசதிகளுள் ஒன்றாக திகழும் அதேநேரம் CSK நிறுவனம் கடைப்பிடித்துவரும் கடுமையான சர்வதேச தர நிர்ணயங்களை அனுசரித்துச் செல்வதாகவும் அமைகின்றது. அதுமட்டுமன்றி மக்கள் மேலும் அதிகமாக செயலாற்ற, சுக உணர்வைப் பெற மற்றும் நீண்டகாலம் வாழ்வதற்கு அவர்களுக்கு உதவும் விடயத்தில் புளுமு நிறுவனம் வழங்கிய வாக்குறுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றது.

இரத்மலானையில் உள்ள தொழிற்சாலையில் மருந்துப் பொருட்கள் தொடர்பான உற்பத்திச் செயன்முறை இடம்பெறும் பகுதிக்கு அடுத்தாற்போல் இந்தப் புதிய உற்பத்தியாக்கல் வசதிகள் நிறுவப்படும். இத்தொழிற்சாலைக்கென 65 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமையானது இப்பிரதேசத்தின் தொழில் கிடைக்குமளவில் மேலதிக அதிகரிப்பாக காணப்படும். இப்புதிய உற்பத்தியாக்கல் வசதிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு உயர்மட்ட விருந்தினர்களும் CSK நிறுவனத்தை சேர்ந்த அலுவலகர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

திறப்பு விழா நிகழ்வில் கிளக்ஸோ ஸ்மித்கிளைன் கன்சியுமர் ஹெல்த்கெயார் ‘லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டி.எஸ்.தயானந்த் கருத்துக் கூறுகையில், ‘இலங்கை அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் வளர்ச்சிக்காக காலூன்றியுள்ள ஒரு சந்தர்ப்பத்தில், ‘ஈனோ’ மற்றும் ‘அயோடெக்ஸ்’ தொழிற்சாலையின் தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதன் மூலம் ‘தேசத்தை கட்டியெழுப்பும்’ வகையிலமைந்த மற்றுமொரு முன்னெடுப்பை மேலும் விஸ்தரிப்பதையிட்டு புளுமு நிறுவனம் பெருமிதம் அடைகின்றது. இந்த முதலீடானது இலங்கையின் ஆயள்வேத மருத்துவ துறை உற்பத்திசார் வரைபடத்தை மேலும் பலப்படுத்தும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்’ என்றார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் 500இற்கு மேற்பட்டோரை புளுமு நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ள அதேநேரம் 200 இற்கும் அதிகமான வணிகப் பங்காளர்களுடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து செயலாற்றுகின்றது. அதனூடாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையை அந்நிறுவனம் தொடுகின்றது. மேலும் அதிகமாக செயலாற்ற, சுக உணர்வைப் பெற மற்றும் நீண்டகாலம் வாழ்வதற்கு மக்களுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பதன் மூலம் மனித வாழ்க்கையின் தராதரத்தை மேம்படுத்துதல் எனும் எமது தூரநோக்கிற்கு உயிரூட்டுவதில் நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம்’ என்றார்.

கிளக்ஸோ ஸ்மித்கிளைன் (CSK) பற்றி:

கிளக்ஸோ ஸ்மித்கிளைன் கன்சியுமர் ஹெல்த்கெயர் – ‘லங்கா (Glaxo Smith Kline Consumer Health Care) நிறுவனமானது கிளக்ஸோ ஸ்மித்கிளைன் பி. எல். சி. (Glaxo Smith Kline PLC) இனது ஒரு அங்கமாக காணப்படுகின்றது. அத்துடன் மக்கள் அதிகமாக செயலாற்ற, சுக உணர்வைப் பெற மற்றும் நீண்டகாலம் வாழ்வதற்கு அவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுப்பதன் மூலம் மனித வாழ்க்கையின் தராதரத்தை மேம்படுத்தும் விடயத்தில் அர்ப்பணிப்புடன் 177 நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் முன்னணியிலுள்ள ஆய்வை அடிப்படையாகக் கொண்ட மருந்துப்பொருள் உற்பத்திக் கம்பனிகளுள் ஒன்றாகவும் திகழ்கின்றது.

கிளக்ஸோ ஸ்மித்கிளைன் ஹெல்த்கெயார் நிறுவனம் இலங்கையில் 60 வருடங்களுக்கும் அதிகமான காலம் தனது  வர்த்தக ரீதியான பிரசன்னத்தைக் கொண்டியங்குகின்றது. அதேநேரம் பனடோல், அயொடெக்ஸ், ஹலிப்ஒரேஞ்ச், சென்சொடைன், ஈனோ, வீவா மற்றும் ஹோர்லிக்ஸ் போன்ற வீடுகள்தோறும் மிகப் பிரபலமாகி நம்பிக்கையை வென்ற வர்த்தக குயீடுகளிலான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பொறுப்புமிக்க பணியை மேற்கொண்டு வருகின்றது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment