அபிவிருத்திப் பணிகளை பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வை

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் மட்டக்களப்பு காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைக்கப்பட்டுவரும் அலங்கார கோபுரம், வடிகாண் திட்ட அபிவிருத்திப் பணிகளை இன்று வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், அல்மனார் இல்லாமிய அறிவியற் கல்லூரி பொதுச்செயலாளரும் ஹிறா பவுண்டேஷனின் சர்வதேச பணிப்பாளருமாகிய மௌலவி மும்தாஸ் மதனி உள்ளிட்டோர் சமூகமளித்திருந்தனர்.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப்  பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்  நிர்வாக சபையினருக்கும் காத்தான்குடி நகர சபைக்குமிடையில் சட்டவிரோத கட்டங்களா? இல்லையா? தொடர்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினைத் தொடர்ந்து சுமார் ஒரு வருடங்களுக்கும் மேலாக இதற்கான அபிவிருத்திப்பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment