பொது பல சேனா முஸ்லிம்களை பொறுமையின் எல்லைக்கு கொண்டுவந்து விட்டது: சுபைர்

 DSC00031முகம்மது நிஸ்பீர்-

பொதுபல சேனவின் நடவடிக்கையினால் முஸ்லிம் சமூகம் பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டது என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் பள்ளிவாயல்கள் உடைப்பு, பர்தா அணிவதற்கு தடை விதிப்பு, போன்றவற்றுடன் ஹலாலை நிறுத்தக்கோரியும் பொதுபல சேன முஸ்லிம்களின் அடிப்படையில் கைவைத்து வருகின்றது. இதனால் முஸ்லிம் சமூகம் பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டது.

பெரும்பாலான சிங்கள மக்கள் பொதுபல சேனவின் இந்த நடவடிக்கையில் பங்கு பற்றாததாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாலும் முஸ்லிம்கள் தங்களது உணர்ச்சிகளை அடக்கி பொறுமைகாத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் மீதும் அலரி மாளிகையின் மீதும் முஸ்லிம் சமூகம் நம்பிக்கையை இழக்கும் நிலைமையினை அரசாங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது.

இனவாதத்தை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இந்த பொதுபல சேனவை அரசாங்கம் உடனடியாக தடை செய்யவேண்டும்.

குருநாகள், மற்றும் பதுளை, மஹியங்கனை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் இருப்புக்களுக்கும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் இருப்புக்களுக்கும், ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் கேள்விக்குறியும் ஏற்பட்டுள்ளது.

எந்த வேளையில் என்ன நடக்குமோ என்ற அச்ச சூழ் நிலையும் இந்தப்பகுதிகளில் இன்று ஏற்பட்டுள்ளது.

இந்த அச்ச சூழ் நிலையை நீக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு.பெரும்பாலான முஸ்லிம்கள் அரசுக்கே ஆதரவளித்தவரும் நிலையில் அரசாங்கம் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment