சர்வதேச மகளிர் தின விழா இன்று!
2013ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். இம்முறை சர்வதேச மகளிர் தின விழா அலரி மாளிகையில் இன்று முற்பகல் 9.00 மணிக்கு நடைபெவுள்ளது.
ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ இவ்விழாவுக்கு தலைமை வகிப்பார். ‘குடும்பத்தை பாதுகாக்கும் அவளைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்nhருளிலேயே இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கு சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குடும்ப பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் சிறுவர்களின் சிறுவர் பாதுகாப்பு குறித்தும் பெண்கள் ஆற்றும் பெரும்பணிகளுகு நன்றிக்கடனாக பல்துறைகளிலும் சிறந்த சேவையாற்றிய 15 பெண்களுக்கு இம்முறை விழாவின் போது ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவின் கரங்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
சர்வதேச மகளிர் தின விழா இம்முறை மாவட்ட ரீதியிலும் பிரதேச ரீதியிலும் கொண்டாடப்படும்.”இன்றைய தினம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் “என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் தலைவி பேராசிரியை ஷானிகா ஹிரிம்புரேகம விசேட சிறப்புரையை நிகழ்த்துவார்.
![008[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/0081.gif?w=300&h=180)
சகல மதத்தலைவர்களும் இந்த விழாவில் கரந்துக் கொள்வர். நாடுமுழுவதிலிமிருந்து 2500க்கும் மேற்பட்ட மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றுவர். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையிலே,சர்வதேச மகளிர் தினம் எவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறித்து சற்று நோக்குவோம்.
1910ஆம் ஆண்டில்இரண்டாவது சமூக மாநாட்டில் உரை நிகழ்த்திய ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் தலைவிகளில் ஒருவரான திருமதி கிலாரா ஸெட்கின் வருடத்தில் மார்ச் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்கவே மார்ச் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. இதன்படி அன்று முதல் இன்று வரை அனைத்துல பெண்களும் மார்ச் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
“ஒரு சமுதாயத்தின் பெருமை அந்தச் சமூகம் பெண்களுக்கு அளித்துள்ள இடத்திலும் மதிப்பிலும் தான் நிர்ணயிக்கப்படுகின்றது “என்று ஷார்ல்ஸ் பூரி கூறுகிறார்.பெண்கள் மலரைப் போன்றவர்கள் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆம்! மலரைப்போன்ற மென்மையானவர்களான பெண்களை கண்களைப்போல காக்க வேண்டும் என்பதை அனைத்துலக நாடுகளும் உணர முற்பட்டு விட்டன.அதனால் தான் அரசாங்கங்கள் கூட பெண்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கி வருகின்றன.
இலங்கையைப் பொருத்த வரை பெண்களுக்கென மகளிர் விவகார அமைச்சு என்ற பெயரில் தனியான அமைச்சு இயங்கி வருகின்றது. இந்த அமைச்சின் மூலம் மகளிருக்காக அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் சேவைகள் அனந்தம்.
விதவைகள் மற்றும் இல்லத்தரசிகளான பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக சுய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்ததுடன் சுய வேலை வாய்ப்புக்காக உதவி மற்றும் வழங்கியதுடன் வட்டியில்லாத கடனுதவிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
வேளிநாட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு ஏற்படும் இம்சைகள் மற்றும் இந்த குடும்பங்களின் சீர்குலைவுகளை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளுக்கான உதவிகளை வழங்கி பொருளாதாரத்தில் அவர்களை வலுவூட்டல்
“திவி நெகும”வாழ்வாதார திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வீட்டுத் தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்புகளில் ஈடுபடுத்தல்
தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு 6 சதவீதமான ஆகக்குறைந்த வட்டி வீதத்தின் கீழ் கடனுதவி வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் செயல் படுத்துதல்இ அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்
குறைந்த வருமானம் பெறும் மீனவக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வீட்டு முகாமைத்துவம் மற்றும் பற்றிய பயிற்சி அளிப்பதுடன் பொருளாதாரத் துறையிலும் அவர்களுக்கு கைகொடுத்தல்.
தோட்டப்புற பெண்களின் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் வன்முறை குறித்து விழிப்பூட்டல் கருத்தரங்குகளை நடத்துதல்
மனோ தத்துவ ரீதியிலும் பெண்களுக்கு விழிப்பூட்டுவது அத்துடன் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகளை அமைத்தல்.
இளம் யுவதிகளின் வாழ்க்கைத் திறனை அபிவிருத்திச் செய்வதற்காக பாடசாலைகளில் 12 வயது முதல் 18 வயது வரையிலான பிள்ளைகளுக்கு கருத்தரங்களை நடத்துதல். பாலியல் சுகாதாரம் எச்.ஐ.வீ மற்றும் நவீன தொழில் நுட்ப பாவனை குறித்த வழிகாட்டல்
- மானபங்கம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வேலைத் திட்டங்கள்.
- பெண்களின் நடவடிக்கைகளை ஆராய்வதற்காக பிரதேச செயலகங்களில் மகளிர் விவகார அமைச்சின் மகளிர் அபிவிருத்தி அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் மூலம் மோட்டார் சைக்கிள்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களின் மேம்பாட்டுக்காக மகளிர் விவகார அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை என சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
அவ்வாறே பெண்களுக்கென மகளிர் விவகார அமைச்சின் கீழ் பெண்கள் பணியகமும் செயல்படுகிறது. பொலீஸ் சேவையிலும் பெண்களுக்கென தனியான பிரிவு இயங்குகிறது.
அவ்வாறே சுகாதார அமைச்சின் கீழும் பெண்களின் சுகாதார மற்றும் போஷாக்கு மேம்பாட்டுக்கென பல்வேறு வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார் போன்றௌரின் சுகாதார நடவடிக்கைகளுக்கென பல பிரிவுகள் இயங்குகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் வாழ்வாதார திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல லட்சம் ரூபாய் செலவில் மகப்பேற்று சிகிச்சை நிலையங்கள் அனைத்தும் நவீன முறையில் புனரமைக்கப்பட்டன.
சமுர்த்தி திட்டத்தின் மூலமும் பெண்களின் சுய வேலைவாய்ப்புக்கென மருத்தி வங்கிகளினூடாக பல்வேறு கடனுதவித்திட்டங்கள் அமுல் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சுயதொழில் பொருளாதாரத்துறையில் தன்னிறைவு அடைந்த பல பெண்கள் தமக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட சமுர்த்தி முத்திரைகளை கூட அரசுக்கு மீள கையளித்த வரலாறு நமக்குண்டு.
-இன்று அரச சேவையில் கடமை புரியும் பெண்களில் விகிதாசாரமும் இன்று பெருமளவு அதிகரித்திருப்பதாக பொது நிருவாக அமைச்சின் புள்ளி விபர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தொழில் புரியும் பெண்களுக்கான பிரசவ கால விடுமுறை ,கணவனை இழந்த தொழில் புரியும் முஸ்லிம் பெண்களுக்கான “இத்தா “விடுமறை போன்றவையும் அரசாங்கத்தினால் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தானே?
நாட்டில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகம் பெண்களுக்கான வன்முறைகள் குறித்த சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கான தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை இன்றைய அரசினால் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமே.
தோழில் நுட்பத்துறையில் இலங்கை பெண்களின் அறிவை விருத்தி செய்வதற்காகவும் அரசாங்கம் (ஐ.சீடீ.ஏ.) I.C.T.A நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இந்த அனைத்து வேலைதிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அவ்வாறே இலங்கைப்பெண்கள் சகல துறைகளிலும் பிரகாசித்தாலும் அரசியிலில் மாத்திரம் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முந்தினம் மொனராகலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவின் போது பிரஸ்தாபித்தார்.
ஆம்! அரசியலிலும் நம்நாட்டு பெண்கள் கொடி கட்டி பறக்க வேண்டும். பாராளுமன்றத்திலும் எமது பெண்கள் இருந்தால் பெண்களுக்கு நன்மை பயக்கும் மேலும் பல சட்டமூலங்களை பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லவா?
எனவே, எதிர்வரும் தேர்தல்களின் போது பெண்கள் பெண்களுக்காக வாக்களித்து பல பெண்களை பாராளுமன்றம் செல்ல வகை செய்ய வேண்டும்.
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றும் அரசின் இந்த பயணத்தில் பெண்களின் பங்களிப்பும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.எனவே சர்வதேச மகளிர் தினமான இன்றை தினத்தில் எமது பெண்கள் இதற்கான திடசங்கர்ப்பம் பூண்டு செயல்படுங்கள் சோதரிகளே!!
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment