காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் மரண நன்கொடை வழங்கும் நிகழ்வு

DONATEடீன் பைரூஸ்.

காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த  மா்ஹூம் முகம்மது பக்கீர் முகைதீன்  அவா்களின் வபாத்தினை முன்னிட்டு காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின்  ஏற்பாட்டில் மரண நன்கொடை ( DEATH DONATION) வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

காத்தான்குடி 05 , பழைய வீதியில் வசித்து வந்த   முகம்மது பக்கீர் முகைதீன் (றைவர்) அவா்களின் வபாத்தினை அடுத்து ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் விதி முறைகளுக்கமைவாக மேற்படி  மரண  நன்கொடை அன்னாரின குடும்ப உறுப்பினா்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவா் ஜனாப்  M. அபூபஸல், செயளாலர்,  ஜனாப் ABM. நிஹார் (மௌலவி) பொருளாலர் ஜனாப்  M. சித்தீக் உட்பட உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனர்.DONATE

Published by

Leave a comment