ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளரும் மௌலவி வஸீமின்(மனாரியின்)தந்தை இன்று மரணம்

janasaபழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளர் ஜனாப் ஏ.ஜீ.எம். கலீல் இன்று வியாழக்கிழமை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இவர் சுமார் இரண்டரை மாத காலமாக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததுடன் நேற்று முன்தினம் இலங்கை தாய்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மேலும் சிகிச்சைக்காக இன்று அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் அவர் மரணமடைந்துள்ளதாக அவரின் புதல்வர் மௌலவி வஸீம் (மனாரி) தெரிவித்தார்.

 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடித்தக்கது.

 அன்னாருக்கு வல்ல இறைவன் அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக!

Published by

Leave a comment