இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகம்

id%20card[1]டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகமாகும் என்றும் இதன் மூலம் அடையாள அட்டைகளிலான குளறுபடிகள் நீங்குமென்றும் ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். எம். என். சரத் குமார தெரிவித்தார்.

இலத்திரனியல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணியில் 800 பயிலுனர் பட்டதாரிகள் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

332 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 332 அலகுகளுக்காக தரவுகளை இவர்கள் சேகரிப்பர். டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகமாகும். இதன் மூலம் அடையாள அட்டைகளிலான குளறுபடிகள் நீங்குமென்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை ஜீ. சீ. ஈ. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.2 013 அக்டோபர் 31 ஆம் திகதி 16 வயதைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

அதிபர்கள் ஊடாக தற்போது முதல் விண்ணப்பங்களை அனுப்பலாம்.இருவாரங்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் சரத்குமார தெரிவித்தார்.

அதிபர்மார், மாணவர்கள் பெற்றோர் திணைக்களத்துக்கு வரத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment