– பழுளுல்லாஹ் பர்ஹான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதி புதன்கிழமை தோறும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மிகச்சிறந்த வளவாளர்களினால் மிகச்சிறந்த தலைப்புக்களில் தொடர்ந்தும் வாராந்த நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
ஒவ்வொரு மாதத்தினதும் முதலாம் வாரத்தில் அல்குர்ஆன் விளக்கவுரையும், இரண்டாம் வாரத்தில் அல்-ஹதீஸ் விளக்கவுரையும், மூன்றாம் வாரத்தில் ஸீரா சம்பந்தமான விளக்கவுரையும், இறுதி வாரத்தில் பிக்ஹூடன் சம்பந்தப்பட்ட விளக்கவுரைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

முழுமையாக இளைஞர்களை நோக்காகக் கொண்டே இவ் வாராந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இந்த பயன்மிக்க வாராந்த நிகழ்ச்சிக்கு உங்களது இளம் வாலிபர்களை கலந்து கொள்ளச் செய்து பயனடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் இன்றைய தினம் அல்குர்ஆன் விளக்கவுரை இடம்பெறும்.
Leave a comment