– பழுளுல்லாஹ் பர்ஹான்

ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) ஏற்பாட்டில் கிழக்குப் பிராந்திய ஊழியர் ஒன்று கூடலும் இவ்வருடம் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 03 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் கடந்த ஞாயிறன்று ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஜம்இய்யத்துத் தலபதில் இய்லாமிய்யா (ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின்) கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான ஐ.எம்.இப்திகார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசிய தலைவரான எஸ்.எம்.சுபியான் (நளீமி) அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஜம்இய்யாவின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும்; கலந்து கொண்டனர்.

இதன்போது அஷ்-ஷெய்க். எம்.டி.எம். றிஸ்வி (மஜீதி) மற்றும் அஷ்-ஷெய்க். எம்.சீ.ஏ. வாஜித் (நளீமி) ஆகியோரது சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் போது இவ்வருடம் கிழக்கு மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் 03ஏ சித்தி பெற்ற 40 மாணவார்களுக்கு பரிசில்கள் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment