மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாது எனவும் தான் அவ்வாறு எந்தவொரு பணிப்பும் வழங்கவில்லை எனவும் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன் மஹர பள்ளிவாசல் அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த அவர், தனது எழுத்து மூல பணிப்பு வரும் வரை மஹர முஸ்லிம் பள்ளிவாசல் தொட ர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அறிவித்து சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் நேற்று அறிவித்துள்ளேன்.
பள்ளிவாசல் தொடர்பில் மஹர சிறை அதிகாரிகள் ஏதும் நட வடிக்கை எடுத்திருந்தால் அதனை செயற்படுத்தக் கூடாது எனவும் பணித்துள்ளேன் என்றார்.
இதேவேளை மஹர பள்ளி விடயம் குறித்து ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.யும் அமைச்சருடன் நேற்று கலந்துரையாடியுள்ளார். இதன்போது பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என அமைச்சர் உறுதியளித்ததாக அஸ்வர் எம்.பி. கூறினார்.
-தினகரன்
Leave a comment