
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய சமய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பாதுகாப்பு அமைச்சில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்புக்கான அழைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவருக்கு விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத சமயங்களின் பேரவைத் தலைவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் (பலாஹி) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசம் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் பலாஹியும், ஏறாவூர் பிரதேசம் சார்பாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் லத்திப் ஹாஜியாரும் மற்றும் ஓட்டமாவடி பிரதேசம் சார்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் ஜூனைட் நளீமி ஆகியோர் இந்த சந்திப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment