தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சமாதானப் பேரணி

pad-yatra-1[1]ஆயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து 30 வருட கால பயங்கரவாதத்ததை தேற்கடித்து உருவாக்கிய சமாதானத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான சமாதான பேரணி இன்று கதிர்காமத்திலிருந்து வடக்கு நோக்கி ஆரம்பமானது.

இந்த சமாதானப் பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இணைந்து கொண்டனர்.

திபெத் ஆன்மீகத் தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையில் ஆரம்பமான பேரணிக்கு ஜனாதிபதி செயலகம்- இலங்கை இளைஞர் சமுதாய சம்மேளம்- இளைஞர்களுக்கான நாளை மற்றும் ஊவா மாகாண சபை இதற்கு ஆதரவு வழங்கின.

pad-yathra-3[1]

அத்துடன் இந்தியா- நேபாளம்- இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதத்தலைவர்களும் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர்.

அத்துடன்- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச்சேர்ந்த 1500 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் பேரணியில் கலந்து கொண்டனர்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment