சமய விவகார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 15 இஸ்லாமிய சமயப்பாடசாலை (அஹதிய்யா) ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

பழுலுல்லாஹ் பர்ஹான்
 

BY: FM. Farhan
BY: FM. Farhan

மய விவகார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய சமயப் பாடசாலை (அஹதிய்யா) ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயப் பொறுப்பாளர் ஜூனைட் நளீமி தலைமையில் காத்தான்குடியில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலயத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 15 இஸ்லாமிய சமயப் பாடசாலை (அஹதிய்யா) ஆசிரியர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் தலைவரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான மௌலவி ஏ.எம். அப்துல்காதர் (பலாஹி), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் ஜூனைட் நளீமி, மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் பிரதித் தலைவர் மௌலவி பாயிஸ் இஸ்லாஹி ஆகியோர் சீருடைகளை வழங்கிவைத்தனர்.

 இஸ்லாமிய சமயப் பாடசாலை (அஹதிய்யா) ஆசிரியர்களுக்கு சீருடை      வழங்கும் நிகழ்வை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின்   பொதுச் சபைக் கூட்டமும் அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் தலைவரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் தலைவரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான மௌலவி ஏ.எம். அப்துல்காதர் (பலாஹி), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய காரியாலய பொறுப்பாளர் ஜூனைட் நளீமி, மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் பிரதித் தலைவர் மௌலவி பாயிஸ் இஸ்லாஹி , மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் ஆசிரியர்கள் என பலரும் பிரசன்னமாயிருநதனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment