கொரியாவுக்கு கிழக்கிலிருந்து அரசியல் பிரமுகர்கள் குழு விஜயம்

Meerasahib– பழுளுல்லாஹ் பர்ஹான்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.அப்துல் மஜீட், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் குழு இன்று (06.03.2013) கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொரியா பயனமாகவுள்ளனர்.

ஆசிய மன்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கொரிய நாட்டில் நடைபெறவுள்ள உள்ளுர் பொருளாதார ஆட்சி அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான  கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகவே இவர்கள் கொரியா பயணமாகவுள்ளனர்.

மேற்படி கலந்துரையாடல் 07ம் திகதி நாளை முதல் 22ம் திகதிவரை நடைபெற ஏற்பாடாகி உள்ளதாகவும் இதன்போது கொரியாவில் உள்ள உள்ளூராட்;சி மன்றங்களின் நடைமுறைகள் தொடர்பாகவும் அங்குள்ள நகர அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி, திண்மக் கழிவு மற்றும் வருமான முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட உள்ளதாகவும் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட் மற்றும் கிழக்கு மகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் பயணிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Published by

Leave a comment