– பழுளுல்லாஹ் பர்ஹான்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பான சமபோஷ வர்த்தகநாமத்தின் மூலம் அனுசரணை வழங்கப்படுகிறது.
இப் போட்டியானது இம்மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை CR & FC City Football விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 4வது தடவையாக ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 14வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சமபோஷ அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இப் போட்டித்தொடரில் 15 போட்டிப் பிரிவுகள் இடம்பெறவுள்ளதுடன், இலங்கையுடன் இணைந்து பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய தெற்கு மற்றும் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கவுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட போட்டித்தொடரில் இலங்கைக் குழுவானது பூட்டான், இந்தியா, ஜோர்தான், பலஸ்தீனம் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டித்தொடர் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் இளைஞர் அபிவிருத்தி பேரணியின் தலைவர் டாக்டர்.மனில் பெர்னாந்து, ‘ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டித்தொடரானது, ஆசிய பிராந்தியத்தில் உதைப்பந்தாட்டம் குறித்தான நல்லிணக்கம் மற்றும் விறுவிறுப்பான போட்டிச் சந்தர்ப்பமாக குறிப்பிடலாம். இப் போட்டித்தொடரில் பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்ட வீராங்கனைகள் பங்கேற்பதனால் அவர்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வலுவடையச் செய்யவும், கலாச்சார தகவல்களை பரிமாறிக் கொள்வதற்குமான சிறந்த வாய்ப்பாக இப்போட்டிகள் அமையும்’ எனத் தெரிவித்தார்.
ஆசிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிக்கான அனுசரணை குறித்து பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், ‘குழந்தைகளை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் செய்து அவர்களை உடல், உள ரீதியாக வலுவடையச் செய்வதற்கான பங்களிப்பை வழங்குவதே எமது குறிக்கோளாகும். போட்டிகள் மூலம் பெறும்; உடற்பயிற்சி மூலம் குழந்தைகளின்; ஆரோக்கியம் மேம்படுவதுடன், போட்டிப் பயிற்சிகள் மற்றும் போட்டி முடிவுகள் போன்றவற்றால் வெற்றி தோல்வியை ஏற்கும் மனப்பாங்கு மற்றும் மன வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. விசேடமாக இத்தகைய போட்டிகளின் போது எமது வீராங்கனைகள், வெளிநாடுகளைச் சேர்ந்த சகோதர வீராங்கனைகளுடன் சேர்ந்து போட்டியிடவும், அதனூடாக பல அனுபவங்களைப் பெறவும் பெரும் வாய்ப்பாக அமையும்’ எனத் தெரிவித்தார்.
சமபோஷ வர்த்தகநாமமானது, போட்டிகளில் ஈடுபடுவதற்கு அவசியமான உடல் சக்தியை அளிக்கும் ஆகாரமாக விளங்குவதுடன், பாடசாலை மாணவர்களின் உதைப்பந்தாட்ட திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. இது குறித்து பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் வசந்த சந்திரபால கருத்து தெரிவிக்கையில், ‘சமபோஷ வர்த்தகநாமமானது தொடர்ச்சியாக உதைப்பந்தாட்ட போட்டிகளுடன் இணைந்துள்ளதுடன், இவ் விளையாட்டு குறித்து கிராமப்புற சிறுவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது. இதனூடாக, முறையான பயிற்சிகள் மூலம் வீர, வீராங்கனைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதே எமது முதல் எதிர்பார்ப்பாகும்’ என்றார்.
தொடர்ச்சியாக உதைப்பந்தாட்ட போட்டிகளுடன் இணைந்துள்ள சமபோஷ வர்த்தகநாமத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கும் அனுசரணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக சமபோஷ வர்த்தகநாமமானது 13 வயதுக்குட்பட்ட பாடசாலைக்களுக்கிடையேயான ஆடவர், பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியதுடன், இவ்வருடம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் சோளம், பயறு, அரிசி, சோயா போன்ற 4 தானிய வகைகளினால் தயாரிக்கப்பட்ட ஆகாரமான சமபோஷ வர்த்தகநாமத்தில் 9 விட்டமின்கள் மற்றும் கனியுப்புகள் போன்றன அடங்கியுள்ளன.
Leave a comment