
– ஏ.எல்.எம்.தாஹிர்
வவுனியா தெற்கு போகஸ்வௌ கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஒருகோடி பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மீள்குடியேற்ற அமைச்சு வழங்கி வைத்துள்ளது.
இக்கிராமத்திற்கு நேரடியாக விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் மீள்குடியேறிய மக்கள் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான சீமெந்து, தகரம் உட்பட தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தார்.


அத்துடன் வடமாகாண ஆளுநரின் நிதி, பொதுமக்களால் சேகரிக்கப்பட்ட நிதி என்பவற்றின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் அமைச்சர் குணரத்ன வீரகோனினால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் முப்பது வருடகால யுத்தத்தினால் இந்நாட்டில் மூவின மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், மீள்குடியேற்ற அமைச்சு இன, மத, மொழி வேறுபாடின்றி பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றது. மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளையும் மிக விரைவில் தீர்த்து வைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

Leave a comment