
-MJ
இதுவரைக்கும் வாய் திறக்காமல் மௌனம் காக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாட்டில் மற்றுமொரு முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை பேரினவாதக் குழுக்களால் இலங்கையில் மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்தப்பட்டு வருகின்றன.
இந்தவகையில் பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாள் துயிலெழுகையில் இலங்கை முஸ்லிம்கள் அச்சம் சூழ்ந்த அபாயத்தை அண்மைக்காலமாக எதிர்நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a comment