நீர்கொழும்பு கடல் ஏரி (களப்பு) பிரதேசத்தில் விமான படையினால் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட வரவேற்பு மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை விமான படையின் 62ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளின் ஒரு அங்கமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
முப்படையினரினரின் திருமண மற்றும் விசேட நிகழ்வுகள் மற்றும் பிரதேசவாசிகளின் முக்கிய நிகழ்வுகள் இங்கு இடம்பெறுவதற்கான சகல வதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மிகவும் ரம்மியமான சூழலில் கடல் ஏரியின் அருகில் இந்த வரவேற்பு மண்டபம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
– அரசாங்க தகவல் திணைக்களம்
![He_negambo_lagoon_hotel_-4[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/he_negambo_lagoon_hotel_-41.jpg?w=300&h=207)
![He_negambo_lagoon_hotel_-6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/he_negambo_lagoon_hotel_-61.jpg?w=300&h=158)
Leave a comment