மருத்துவமனையில் இருந்து அரண்மனைக்குத் திரும்பினார் ராணி எலிசபெத்

SO-
 eeமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசபெத் ராணி நேற்று தனது அரண்மனைக்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்று முன் தினம் லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராணி எலிசபெத் நேற்று மருத்துவமனையில் இருந்து தனது அரண்மனைக்கு திரும்பியுள்ளார்.
அடுத்த மாதம் தனது 87வது வயதை நிறைவு செய்யும் ராணி எலிசபெத், சிகப்பு நிற உடையில் புன்னகைத்தபடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கியிருந்து அதனால் இதர நோயாளிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தவிர்க்க விரும்பிய அவர், 24 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அரண்மனைக்கு திரும்பிவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.e

Published by

Leave a comment