குறுந்திரைப்பட இருவட்டு நகரபிதாவினால் வெளியிடப்பட்து!

– முகம்மது ராஸி

BY: M. Razi
BY: M. Razi

கிண்ணியா மண்ணை பிரபல்யப்படுத்தும் வகையில் குறுந்திரைப்பட இருவட்டு வெளியீடு கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தலைமையில் இடம்பெற்றது.

திரைப்படத்துறை பிரமாண்டமாக இருந்தாலும் நம்மவர்களும் அதில் முயற்சிகளை எடுக்காமல் இல்லை. சுpல வருடங்களுக்கு முன் இருபயணங்கள் திரைப்படம் என்ற முயற்சியில் எடுக்கப்பட்டாலும் அது முயற்சி என்று நாம் பாராட்டலாம். நல்ல படைப்பை நாம் இந்தியாவில் உள்ளது போல் எதிர்பார்க்க முடியாவிட்டாலும் இது அவர்களின் முயற்சி. எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் கேட்டு மாற்றத்தை கொண்டுவர இதில் ஈடுபடுவோர் முயற்சிக்க வேண்டும்.

BY: M. Razi
BY: M. Razi

இதுவரை கிண்ணியாவில் இல்லாதிருந்த திரைப்படம் எடுப்பதும் வெளியிடுவதுமான ஒரு நிகழ்வு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகின்றது. கன்னி முயற்சியில் எடுக்கப்பட்டாலும் மிக குறுகிய கால இடைவெளிக்குள் அன்னாவியார் எடுக்கப்பட்டு கொஞ்சம் விமர்சையாக வெளியீடும் வைக்கப்பட்டுள்ளது.

Your Kattankudy
Your Kattankudy

நிகழ்வின் இறுதியில் அன்னாவியார் இருவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரதிகளை நிகழ்விற்கு வருகை தந்திருந்த கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி, பிரதி தவிசாளர் சட்டத்தரணி சபறுள்ளா, மூத்த கவிஞர்கள், கலைஞர்கள் வழங்கி வைத்தனர். இதில் சுவைஞர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Your Kattankudy
Your Kattankudy

Published by

Leave a comment