பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ‘சொத்துப் பங்கீடு’ இஸ்லாமிய மாநாடொன்று எதிர்வரும் 08ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.
‘சீதனத்தை நாம் எதிர்ப்பது ஏன்’ ‘சீதனக் கொடுமையும் சீரழியும் முஸ்லிம்களும்’ சொத்துப் பங்கில் புறக்கணிக்கப்படும் ஆண்கள்’எனும் முக்கிய தலைப்புக்களில் அஷ்ஷெய்க் அன்சார் (தப்லீகி), அஷ்ஷெய்க் அப்துல் ஹமீட் ஷரயி, அஷ்ஷெய்க் பீ.எம். அஸ்பர் பலாஹி ஆகிய பிரபல்யமிக்க உலமாக்களினால் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.
இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூகத்தில் சீதனத்தினால் ஏற்படும் விபரீதம் குறைந்து சமூகத்தை இஸ்லாமிய கட்டமைப்பைக் கொண்ட சிறந்த சமூகமாக மாற்ற முடியும் என காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றஊப் தெரிவித்தார்.
குறித்த அமைப்பு சமூகத்தில் ஆண்மீக ரீதியான யெற்பாடுகளை மாத்திரம் முன்னெடுத்து வருவது மட்டுமல்hமல் சமூகப் பிரச்சிணைகளை இனங்கண்டு அதற்கான சிறந்த தீர்வுகளை வழங்கல், அவை தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment